(எம்.மனோசித்ரா)
நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளின் வீடுகள் மற்றும் சொத்துக்களை சேதப்படுத்தியவர்களை கைது செய்வதில் காண்பிக்கும் ஆர்வத்தை, காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டவர்களை கைது செய்வதிலும் காண்பிக்குமாறு சகல தரப்பினரையும் கேட்டுக் கொள்வதாக முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.
காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரி ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இதற்கு நாம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். எவ்வாறிருப்பினும் இந்த கடிதத்தை தற்போது அரசாங்கத்தின் ஒரேயொரு முதன்மையான அதிகாரியாகவுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.