மக்கள் மரணிக்கப் போகும் வேளையில் நாடாளுமன்றத்திலுள்ள மக்கள் பிரதிநிதிகள் அரசியலமைப்புக்குள் சிக்கியிருப்பார்கள் என்றால் அத்தகை மக்கள் பிரநிதிகளாலும், அரசியலமைப்பினாலும் பயனில்லை. நாம் சந்திகளில் அரசியலபை;பை தீயிட்டு எரிப்போம் என வண. பாகொட ஜன்தவன்ச தேரர் கூறினார்.
இடைக்கால அரசாங்கம் குறித்து இலங்கை மன்றக் கல்லூரியில், அரசியல் கட்சிகளுக்குத் தெளிவுபடுத்துவதற்காக மதத் தலைவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்துக்கு வந்தவேளையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது வண. பாகொட ஜன்தவன்ச தேரர் மேலும் கூறுகையில்,
‘தேசிய கீதம் பாடப்படும்போது நாம் விறைத்த நிலையில் நிற்போம். ஆனால், பக்கத்தில் உள்ளவர் மயங்கி வீழ்ந்தால் நாம் விறைத்து நிற்பதில்லை.
அது போன்று நாட்டில் அனைத்தும் உடைந்து விழுந்துள்ள வேளையில், மருந்துகள் கூட இல்லாமல் மக்கள் மரணிக்கப் போகும் வேளையில், உண்பதற்கு உஷணவில்லாமல் மக்கள் இறக்கப் போகும் வேளையில், இன்று நாட்டின் அரசியலமைப்புக்குள் சிக்கி, தமது அரசியல் நிலைப்பாடுகளை பாதுகாத்துக்கொண்டு, மக்கள் செத்துப் போகட்டும் என்று நாட்டின் நாடாளுமன்றத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் இருப்பார்களேயானால், அப்படியான மக்கள் பிரதிநிதிகளும் எமக்குப் பயனில்லை, அந்த அரசியலமைப்பும் எமக்குப் பயனில்லை. நாம் சந்திகள் பலவற்றில் அரசியலமைப்பை எரிப்போம்’ என்றார்.