“1990 சுவசெரிய” அம்பியூலன்ஸ் சேவை தற்போது
நிலையற்றதாக மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.பண பற்றாக்குறையால் குறித்த அம்பியூலன்ஸ் சேவை எந்த நேரத்திலும் இடைநிறுத்தப்படும் ஆபத்து உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த அம்பியூலன்ஸ் சேவையின் காரணமாக நாளொன்றுக்கு 1000இற்கும் மேற்பட்ட நோயாளிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாகவும், இதனை சமூக பாதுகாப்பு நடவடிக்கையாக பேணுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
எனவே இதனை தொடர தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யுமாறு நிதியமைச்சரை கேட்டுக்கொள்வதாகவும் ஹர்ஷ டி சில்வா எம்.பி குறிப்பிட்டார்.