எரிபொருள் விலை அதிகரிப்புக் கு நிகராக போக்குவரத்து கட்டணங்களும் அதிகரிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்து இலங்கை பெற்றோலிய தனியார் பவுஸர் உரிமையாளர் சங்கத்தினர் நேற்று (30) சனிக்கிழமை நள்ளிரவு முதல் பணிபகிஷ்கரிப்பை முன்னெடுத்தனர்.
இதன் காரணமாக இன்று (01) நாட்டின் பெரும்பாலான எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் விநியோக நடவடிக்கைள் பாதிக்கப்பட்டன.
இதன் காரணமாக கொலன்னாவை மற்றும் முத்துராஜவெல பெற்றோலிய முனையம் என்பவற்றில் எரிபொருள் வழங்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. எரிபொருள் போக்குவரத்தில் ஈடுபடும் பவுஸர் உரிமையாளர்கள் சிலர் , பவுஸர்களை அங்கு நிறுத்திவிட்டு எஞ்சின் பகுதியை மாத்திரம் எடுத்துச் சென்றிருந்தமையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.