மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர், திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர், தம்மைச் சந்திக்க எந்தவொரு அரசியல்வாதியையும் அனுமதிக்க போவதில்லை என தீர்மானித்துள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக முன்வைத்த முன்மொழிவுகளுக்கு இதுவரை பொறுப்பான எந்தவொரு நபரும் பதிலளிக்கவில்லை என்பதனாலேயே அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.