இன்றைய போராட்டத்தில் உரிமையை
நிர்வாக முடக்கல் காரணமாக, தொழிலில் அல்லது வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என அச்சுறுத்தும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிக் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
World Express Services
இன்றைய தினம், நாடளாவிய ரீதியில், பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட எவருக்கும் உரிமை உள்ளது.
எனினும், கலகம் விளைவிக்கும் வகையில், செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, போராட்டத்தில், ஈடுபடுபவர்கள், அமைதியான முறையில் அதில் ஈடுபடுமாறு சிரேஷ்ட காவல்துறை பேச்சாளர், அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.