டீசல் பற்றாக்குறையால் நாடளாவிய ரீதியில் பஸ் சேவைகளை 10 வீதத்தால் குறைக்க வேண்டியுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் எரிபொருள் இல்லாத பட்சத்தில் பஸ் சேவைகளை முற்றாக நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள் வழமையாக இயங்கும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.