இலங்கையில் மீண்டும் அவசரகால சட்டம்
அமுல்படுத்தப்பட்டமை கவலையளிப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜலி சுங் தெரிவித்துள்ளார்.ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமைதியாக வாழும் மக்களின் குரல் கேட்கப்பட வேண்டும், இலங்கையர்கள் எதிர்கொள்ளம் உண்மையான சவால்களில் இருந்து நாட்டை வழமைக்கு கொண்டுவர வேண்டும், எனவே இதற்காக தீர்வை நோக்கிய பயணத்தை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்த அவர், அதனூடாக இலங்கையர்களுக்கு ஒரு நீண்டகால தீர்வு அவசியம் எனவும் அமெரிக்க தூதுவர் ஜலி சுங் குறிப்பிட்டார்.