எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை வழமைக்கு திரும்ப மேலும் இரண்டு நாட்கள் செல்லும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது கையிருப்பில் உள்ள டீசல் சில நாட்களுக்கு போதுமானதாக இருப்பதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பெட்ரோல் கையிருப்பு வரையறுக்கப்பட்ட அளவிலேயே உள்ளது. ஒக்டேன் 92 மற்றும் 95 பெற்றோலை கொண்ட கப்பல் ஒன்று இலங்கை கடல் எல்லைக்கு அருகில் உள்ளது.
இதனை விடுவிப்பதற்காக இதுவரை பணம் எதுவும் கிடைக்கப்பெறவில்லை எனவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார்