டீசல் இன்மையால் நாடு முழுவதும் பேருந்து சேவைகளை 10 சதவீதமாக குறைக்க நேரிட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து டீசல் கிடைக்காவிட்டால் நாளை முதல் தனியார் பஸ்கள் சேவையிலிருந்து விலக நேரிடும் என அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
எனினும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள காலப்பகுதியில் சகல பஸ்களும் வழமை போன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.