01. அன்றைய தினம் முதலாவதாக பிரதி சபாநாயகர் தேர்வு நடைபெறும். பிரதி சபாநாயகர் பதவிக்கு இருவர் போட்டியிட்டால் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்படும்.
02. அதன் பின்னர் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நம்பிக்கை தெரிவிக்கும் பிரேரணை மீதான விவாதமும் வாக்கெடுப்பும் இடம்பெறும்.
03. இதையடுத்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச மீது அதிருப்தி தெரிவிக்கும் பிரேரணை மீதான விவாதமும் வாக்கெடுப்பும் இடம்பெறும் என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, பிரதி சபாநாயகர் பதவிக்கு அஜித் ராஜபக்சவை முன்மொழிவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று தீர்மானித்துள்ளது.
தமது கட்சியின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவை, பிரதி சபாநாயகர் வேட்பாளராக களமிறக்குவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
பெண் எம்.பியொருவர் பிரதி சபாநாயகர் பதவிக்கு வரவேண்டும் என்ற விடயத்தை பிரதமரும் அறிவித்துள்ளார்.