மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியில் திருடப்பட்ட பணத்தை தான் உள்ளிட்ட தனது குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டதாக ஊழல் ஒழிப்பு அமைப்பின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க முன்வைத்த குற்றச்சாட்டை வன்மையாக கண்டிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
விசேட அறிக்கையொன்றை வெளியிட்டே அவர் இதனைத் தெரிவித்தார்.
அரசியல் இலாபத்திற்காக இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். எவ்வாறாயினும், இது தொடர்பில் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மைத்ரிபால சிறிசேன தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.