பெற்றோல் விநியோகம் இன்றும் (18) நாளைம் (19) இடம்பெறாது என்பதால் பொதுமக்கள் வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும், டீசல் போதியளவு கையிருப்பு இருப்பதனால் தொடர்ச்சியாக விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் விஜேசேகர மேலும் தெரிவித்தார்.
ஆட்டோ டீசல் மற்றும் சூப்பர் டீசல் என்பன எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டன. எதிர்வரும் வாரங்களில் 1,190 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு ஆட்டோ டீசல் மற்றும் சூப்பர் டீசல் தடையின்றி வழங்க முடியுமென நம்புகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.