வேகமாகப் பரவும் தன்மை கொண்ட ஒமைக்ரான் வகை கொரோனாவின் புதிய துணை ரகத் தொற்று, சிங்கப்பூரில் இருவரிடம் கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:
புதிய வகை கொரோனா வைரஸை கண்காணிக்கும் சுகாதாரத் துறை அமைச்சக திட்டத்தின் கீழ், இருவருக்கு பிஏ.2.12.1 ரக ஒமிக்ரொன் வகை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த இருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்ட உடனேயே, அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டனா்.
பிஏ.2.12.1 துணை ரகம் கவலைக்குரியது என்றோ, கண்காணிக்கப்படவேண்டியது என்றோ உலக சுகாதார அமைப்பு இதுவரை அறிவிக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
தீவிர தொற்றும் தன்மை கொண்ட ஒமிக்ரொன் ரகமான பிஏ.2-வின் துணை ரகமான பிஏ.2.12.1, மாா்ச் மாத மத்தியில் உலகம் முழுவதும் அதிக பேருக்கு பரவியது.