பாணந்துறை பிரதேசத்தில் தனியாக வசிக்கும் வயோதிப பெண்களை இலக்கு வைத்து, பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டு வந்த ஒழுங்கமைக்கப்பட்ட கும்பலைச் சேர்ந்த சந்தேகநபர்களை பாணந்துறை தெற்கு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பகலில் யாசகர்கள் வேடத்தில் வீடுகளை நோட்டமிடும் குறித்த கொள்ளையர்கள், இரவில் முகமூடி அணிந்து வந்து கூரிய ஆயுதங்களைக் கொண்டு கதவுகளை உடைத்துவீடுகளில் கொள்ளையிட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள், சுமார் 2 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகள், இலத்திரனியல் பொருட்கள் மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் என்பனவற்றையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.