ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக பதவி விலக வேண்டுமென தேசிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
அவர் ஜனாதிபதியாக செயற்படுவாராயின் நாட்டில் ஒருபோதும் அமைதியை எதிர்பார்க்க முடியாதென அக்கட்சியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், தற்போது பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை இல்லாத காரணத்தினால், ஜனாதிபதி பதவி விலகுவாராயின் தற்காலிகமாக சபாநாயகர் அவர்கள் நாட்டை பொறுப்பேற்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
அத்தோடு, அதற்போதைய சூழ்நிலையில் இடைக்கால அரசு அல்லது சர்வ கட்சி அரசாங்கம் ஸ்தாபித்தாலும் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ள போவதில்லை எனவும், விரைவில் பொதுத் தேர்தலுக்கு செல்லவேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.