லங்கா IOC எரிபொருள் விலையை அதிகரித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவிவரும் செய்தியானது உண்மைக்கு புறம்பானது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
லங்கா IOC மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் என்பன எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளவில்லை எனவும், இவ்வாறு போலியான பிரசாரங்களை மேற்கொள்ளும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எரிசக்தி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.