னக்கு பிரதமர் பதவியை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிராகரித்துவிட்டாரென அறியமுடிகின்றது.
இதனால் ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை பிரதமராக பதவியேற்பது உறுதியாகியுள்ளது.
” பிரதமராக பதவி ஏற்குமாறு நான் அழைப்பு விடுத்தேன். இரு நாட்கள் எவரும் முன்வரவில்லை. அதனை ரணில் ஏற்றார். அவருக்கு வழங்கிய உறுதிமொழியை மீறமுடியாது.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தால், அதனை நிரூபித்து பிரதமர் பதவியை பெற்றுக்கொள்ளவும்.” என எதிர்க்கட்சித் தலைவரிடம், ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.