ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதற்கான 2 நிபந்தனைகளை முன்வைக்க சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அந்த குழு நாடாளுமன்றில் இன்று கூடிய போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேறும் பட்சத்தில் அரசாங்கத்தை பொறுப்பேற்க நடவடிக்கை எடுப்பதுடன் இடைக்கால அரசாங்கத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி விருப்பத்தை வெளியிட வேண்டும் என்ற நிபந்தனைகளை சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு முன்வைத்துள்ளது.