ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்ணான்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
நெருக்கடியான நிலையில் நாட்டை பொறுப்பேற்று பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு முன்னிலையானமைக்காக ஆதரவு வழங்கவுள்ளதாக அவர்கள் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, ஸ்தாபிக்கப்படவுள்ள அனைத்து கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தாம் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி சுயாதீனமாக செயற்பட நடவடிக்கை எடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்ணான்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அனைத்து கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கப்படும் பட்சத்தில் அமைச்சின் பொறுப்புக்களை உரிய வகையில் நிறைவேற்றவுள்ளதுடன், அமைச்சர்களுக்கு கிடைக்கப்பெறும் வரப்பிரசாதங்கள் எவையையும் ஏற்கப்போவதில்லை எனவும் அவற்றை நாட்டை கட்டியெழுப்புவதற்காக ஒதுக்குவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.