இங்கிரிய, உறுகல பிரதேசத்தில் வீடொன்றினுள் மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு கம்பியொன்றினால் தாக்கி, தந்தையை கொலை செய்த சம்பவத்திற்காக மூத்த மகனை இங்கிரிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இரத்தினபுரி, பாணந்துறையில் தனியார் பேரூந்தில் சாரதியாகப் பணிபுரிந்து வந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான தேவகே பிரியல் லலிந்ர கருணாதிலக (50) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் குடிபோதையில் தாய்க்கும் பிள்ளைகளுக்கும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்துள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.
கொலைச் சம்பவத்தின் பின்னர் சந்தேகநபர் வீட்டை விட்டுத் தப்பிச் சென்றதாகவும், இதுபற்றி தனது தாயாரிடம் கூறியதாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
படுகாயமடைந்த நபர் “1990 சுவசெரிய” அம்பியூலன்ஸ் மூலம் இங்கிரிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் மகன் ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.