நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களை உடன் விடுதலை செய்யுமாறு மஹரகம பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்க வேண்டும்.
அவ்வாறில்லையெனில் இது நாட்டில் பாரதூரமான பிரச்சினைகளை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் இருவர் உள்ளிட்ட 12 பேர் இன்று (04) பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை தெரிந்ததே.