” துப்பு கெட்ட அரசாங்கம். ஒரு நம்பிக்கை, நாட்டை சரி படுத்தி விடுவார்கள் என்று. ஆனால் இன்று வெட்கப்படுகின்றேன், வேதனைப்படுகின்றேன். நான் அரசியலில் இருந்து விடை பெற முடிவு செய்துள்ளேன். அரசியல் காரணமாக யாரையாவது வேதனைப்படுத்தி இருந்தால் தலை குனிந்து மன்னிப்பு கேட்கின்றேன்.”
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ராஜு பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
இவர் வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணியிலும் அங்கம் வகித்தார்.