பாகிஸ்தானின் நவ்ஷேரா மாவட்டத்தில் உள்ள எண்ணெய் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 25 இற்கும் மேற்பட்ட ஆயில்டேங்கர் லொறிகள் சேதமடைந்தன.
தருஜாபா கிடங்கில் இருந்து பற்றிய தீ, காற்றின் வேகம் காரணமாக அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எண்ணெய் டேங்கர் லொறிகளுக்கும் தீ பரவியது.
இதைத் தொடர்ந்து, பெரும் தீப்பிடித்ததில் விண்ணை முட்டும் அளவிற்கு கரும்புகையுடன் தீ கொளுந்து விட்டு எரிந்தது.
இதில், அந்த 25 டேங்கர் லொறிகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.