தேர்தலில் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஈஸ்டர் தாக்குதல்கள் பற்றிய விவரங்களை பலர் வேண்டுமென்றே மறைக்கிறார்கள் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களை தவிர பலர் அறிந்திருந்தார்கள் என்றும் அதனை முன்கூட்டியே தெரிவித்திருந்தால் அந்த மக்களைக் காப்பாற்றியிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
மேலும் சிலர் அதிகாரத்தை கைப்பற்ற விரும்பிய காரணத்தினால் மக்கள் பலியாக்கப்பட்டனர் என்றும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
ஆகவே ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு தரப்பினர் உட்பட அனைத்து அதிகாரிகளும் தங்கள் கடமைகளில் இருந்து தவறிவிட்டனர் என பேராயர் குற்றம் சாட்டினார்.
மூன்று வருடங்களுக்கும் மேலாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றும் தற்போது நடைபெறும் மக்கள் போராட்டம் வெற்றி பெறும் என்றும் பேராயர் குறிப்பிட்டார்.