காலிமுகத்திடல் ஆக்கிரமிப்பு போராட்டம் மீதான தாக்குதல்களுக்கு நீதி கோரி சோசலிச வாலிபர் சங்கத்தினால் பொலிஸ் தலைமையகத்திற்கு வெளியே மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இலங்கை பொலிஸ் துறையின் மூத்த அதிகாரிகள் வெளியே வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த வன்முறைகளுக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி சோசலிச வாலிபர் சங்கம் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.