ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழுவொன்று பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவை பதவி விலகுமாறு கேட்டுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தலைமையில் நேற்று (14) ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற அரசாங்கக் கட்சி உறுப்பினர்களின் கூட்டத்திலேயே இவ்வாறு கோரப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதியினால் பொலிஸ் மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்கள் குழுவொன்று அலரி மாளிகைக்குள் பிரவேசித்த போதும் நடவடிக்கை எடுக்கப்படாததே பொலிஸ் மா அதிபரை இராஜினாமா செய்யுமாறு வலியுறுத்த முக்கிய காரணமாக அவர்களால் முன்வைக்கப்பட்டது.