முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றிற்கு வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய நாடாளுமன்ற அமர்வுகளில் அவர்களின் பிரசன்னமாகியுள்ளதாக தெரியவருகின்றது.
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வன்முறைகளை அடுத்து முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து ரணில் விக்ரமசிங்க புதிய பிரதமராக பதவி ஏற்றுக்கொண்ட நிலையில், நேற்றைய தினம் புதிய பிரதமர் தலைமையில் முதல் தடவையாக நாடாளுமன்றம் கூடியது.
இந்நிலையில் இன்றைய தினம் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளதாக தெரியவருகின்றது.