ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகளில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றதாக ஏபிசி ஊடக வலையமைப்பு வெளிப்படுத்திய குற்றச்சாட்டில் தானோ அல்லது தனது குடும்ப அங்கத்தவர்களோ தொடர்பில்லை என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
தாம் கேள்விப்படாத இரு நிறுவனங்களுக்கிடையில் இடம்பெற்ற பரிவர்த்தனை தொடர்பில் தமது குடும்பத்தினர் மீது குற்றம் சுமத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தாம் இன்னமும் நீதிமன்றம் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.