அமைச்சுப் பதவிகளை ஏற்காமல் நாட்டைக் கட்டியெழுப்ப அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க தமது கட்சி தீர்மானித்துள்ளதாக பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஏனைய சுயேட்சை கட்சிகளுடன் இன்று (16) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் பிரதமரால் முன்மொழியப்பட்ட 15 கமிட்டிகளுடன் இணைந்து, மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உதவுவதாகவும் கம்மன்பில தெரிவித்தார்.
நாங்கள் அமைச்சுப் பதவிகளுக்கு பேராசை கொண்டவர்கள் அல்லர். நாட்டைக் கட்டியெழுப்பவே விரும்புகிறோம். எனவே, அமைச்சுப் பதவிகளை ஏற்காமல் நாட்டைக் கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கு உண்மையாகவும் நியாயமாகவும் ஆதரவளிப்போம் என பிரதமரிடம் தெரிவித்தோம் என்றார்.