நிக்கவெரட்டிய, நாவன பகுதியில் உள்ள வீடொன்றின் மீது சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக கிரில்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் கூறினர்.
நிக்கவெரட்டிய பிரதேசத்தில் அண்மைக் காலமாக கட்சி சார்பற்ற போராட்டங்களில் ஈடுபட்டு வந்த இளைஞர் ஒருவரின் வீட்டின் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்றிரவு இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.