முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின்
கொழும்பு இல்லத்திற்கு அருகில் அவருக்கு எதிராகவும் ஆதரவாகவும் இருவேறு தரப்பினரால் இன்று (07) ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.கொழும்பு 7 , ஐந்தாம் ஒழுங்கையில் ஒன்று கூடிய சிலர் ரணில் விக்கிரமசிங்கவை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது ‘ரணில் வீட்டுக்குச் செல்ல வேண்டும்’ , ‘ரணில் வீட்டிலேயே இருக்க வேண்டும்’ என்றவாறான வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
.முன்னாள் பிரதமர் ரணில் அரசாங்கத்துடன் இரகசிய ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் , அதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையிலேயே தாம் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.
மேலும்ஈ அதே பகுதியில் ரணில் விக்கிரமசிங்வுக்கு ஆதரவு தெரிவித்து பிறிதொரு குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டிலுள்ள நெருக்கடிகளுக்கான ஒரே தீர்வு ரணில் மாத்திரமே எனத் தெரிவித்து இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் ‘ரணில் தூய்மையானவர்’ , ‘மருந்து வேண்டுமா? ரணிலே ஒரே தீர்வு’ என்றவாறான வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.