ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.
அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனை உறுதிப்படுத்தினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக் குழு இன்று காலை 10.00 மணிக்கு ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்கவின் பிரதமர் பதவியின் கீழான அரசாங்கத்தில் இணைந்து கொள்வதில் இருந்து விலகி இருக்க அனைத்து பிரதான எதிர்க்கட்சிகளும் தீர்மானித்ததை தொடர்ந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.