எதிர்வரும் சில நாட்களுக்கு தேவையான எரிபொருள் விரைவில் கிடைக்கும் என எரிபொருள் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, நாட்டிலுள்ள 1990 எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்ளும் வரையில், எரிபொருள் நிலையங்களுக்கு முன்னால் மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.