(எச்.எம்.எம்.பர்ஸான்)
நோன்புப் பெருநாள் தொழுகையில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (3) இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை – பிறைந்துறைச்சேனை பதுரியா பள்ளிவாசலிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குடும்பத்தினருடன் பெருநாள் தொழுகைக்காக சென்றிருந்த பிறைந்துறைச்சேனை பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய முகம்மது இப்றாஹீம் மைமூனாச்சி என்ற 9 பிள்ளைகளின் தாய் ஒருவரே பள்ளிவாசலில் வைத்து மரணமடைந்துள்ளார்.