Our Feeds


Thursday, May 5, 2022

ShortNews Admin

பப்ஜி விளையாடிய நபர் பரிதாபமாக மரணம் - நடந்தது என்ன?



கைபேசியில் பப்ஜி விளையாட்டில் மூழ்கிப் போயிருந்த குடும்பத்தலைவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.


சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவடியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 28 வயதுடைய குடும்பத்தலைவரே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.

“நேற்றிரவு படம் பார்த்துவிட்டு தூக்கத்துக்குச் சென்றோம். காலையில் எழுந்து பார்த்த போது, கணவர் தூக்கிலிட்டு சடலமாக காணப்பட்டார் எனவும், எப்போதும் பப்ஜி விளையாடுவதில் ஆர்வமாக இருப்பார். வேறு பிரச்சினைகள் அவருக்கு இருக்கவில்லை” என்று மனைவி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேமகுமார் விசாரணைகளை முன்னெடுத்தார்.

சடலம் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த மாத இறுதியில் இளவாலையைச் சேர்ந்த இளைஞன் இதே போன்ற காரணத்தினால் உயிரை மாய்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ் நிருபர்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »