நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் அல்லாத அந்நியர்கள் குழுவொன்று நாடாளுமன்ற வளாகத்திற்குள் பிரவேசித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (17) உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் அல்லாத அந்நியர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்து தொலைபேசியில் புகைப்படங்களையும் காணொளிகளையும் எடுப்பதாக அவர் தெரிவித்தார்.
இதனால் சிலர் நாடாளுமன்றுக்குள் வருவதற்கு பயப்படுவதாகவும் எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை கவனத்திற்கொண்டு அந்த நபர்கள் யார் என்பதை கண்டறிந்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.