இலங்கையில் சட்டவிரோதமான உண்டியல் பரிமாற்றம் வழிகளில் வெளிநாட்டு நாணயங்கள் மாற்றும் மையங்களை சோதனையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இந்த கூட்டு சோதனை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். நாட்டில் டொலர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணத்தை சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயங்களை பரிவர்த்தனை செய்யும் நிறுவனங்கள் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.