எரிபொருள் கோரி நாவின்ன பகுதியில்
வீதியை மறித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.இதன் காரணமாக 138 இலக்க பஸ்கள் பயணிக்கும் ஹைலெவல் வீதியின் போக்குவரத்து நடவடிக்கை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
எனவே, குறித்த வீதியினூடாக பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளை தற்காலிகமாக பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.