நேற்று (01) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் சரத் பொன்சேகா ஆகியோருக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
ஹரின் பொன்சேகாவை ஆபாச வார்த்தைகளால் திட்ட முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேரணியில் சரத் பொன்சேகா உரையாற்றுவதற்கு இடம் ஒதுக்கியமை தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
சரத் பொன்சேகா மற்றும் ஹரீன் பெர்னாண்டோ ஆகியோர் இது தொடர்பில் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
சில ஊடக அறிக்கைகளின்படி, பொன்சேகா ஹரீன் பெர்னாண்டோவின் சாரத்தைப் பிடித்து தகாத வார்த்தைகளால் திட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோவும் பொன்சேகாவை ஆபாச வார்த்தைகளால் திட்டி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் பல நாடாளுமன்ற உறுப்பினர்களால் மோதல் சமரசம் செய்யப்பட்டது.