நாடாளுமன்ற வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட
ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. மீண்டும் 17 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் போது ஆர்ப்பாட்டத்தை தொடர தீர்மானித்துள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.தியத உயன நாடாளுமன்ற நுழைவு வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகை பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்தால் நாடாளுமன்றத்தில் இன்று (06) மாலை குழப்பமான நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்க்ள ஒத்திவைக்கப்பட்டது. பின்ன சபை கூடியபோது, நாடாளுமன்ற அமர்வுகளை இம்மாதம் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.