நாடு முழுவதும் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மீண்டும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளன.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மேலும் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
எரிபொருள் போக்குவரத்து பவுசர் உரிமையாளர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கையே இதற்கான காரணம் என கூறப்படுகிறது.
அதிகரித்து வரும் எரிபொருள் விலைக்கேற்ப போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கையை அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.
எவ்வாறாயினும், எரிபொருளை விநியோகிக்க விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
புகையிரதம் ஊடாக எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கை 40 சதவீதமாக விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.