மேல்மாகாண பொலிஸ் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீதான தாக்குதலில் கைது செய்யப்பட்ட இரண்டு பேரினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு கொழும்பு நீதவான் நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இன்றைய தினம் வரையில் விளக்கமறியலில் வைக்க்பட்டனர்.
இந்த நிலையில், குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், சந்தேகநபர்களை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.