Our Feeds


Sunday, May 15, 2022

ShortNews Admin

ஆளுங்கட்சி பிரதம கொரடா மற்றும் சபை முதல்வர் ஆகியோர் நியமனம்.



நாடாளுமன்றில் ஆளுங்கட்சி பிரதம கொரடாவாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.


இதேவேளை சபை முதல்வராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.


முன்னர் நாாளுமன்றின் சபை முதல்வராக அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவும், ஆளும் கட்சியின் பிரதம கொரடாவாக ஜோன்ஸ்டன் பெனான்டோவும் பதவி வகித்திருந்தனர்.


பிரதமராக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் முதலாவது நாடாளுமன்ற அமர்வு நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது.


இதன்போது ரஞ்சித் சியம்பலாபிட்டிய பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து விலகியமையினை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கான தெரிவு அன்றைய தினம் நடைபெறும்.


இதற்கமைய ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் குறித்த பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவின் பெயரை முன்வைக்கவுள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தமது ‘ட்விட்டர்’ பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் பிரதி சபாநாயகர் பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஷவின் பெயரை முன்வைக்கவுள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »