ரஷ்யாவுக்கு எதிராகத் தொடர்ந்து போரிட உக்ரைனுக்கு இராணுவ உதவி வழங்கப்படும் என நேட்டோ அமைப்பு தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷியா போர் 3 மாதங்களை எட்டியுள்ளது. ரஷ்யாவுக்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது.
மேலும் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நிதி மற்றும் இராணுவ உதவி அளித்து வருகின்றன.
இந்நிலையில், ரஷ்யாவுக்கு எதிராகத் தொடர்ந்து போரிட உக்ரைனுக்கு இராணுவ உதவி வழங்கப்படும் என நேட்டோ அமைப்பு அறிவித்துள்ளது. மேலும், ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் வெற்றி பெற முடியும் என்றும் நேட்டோ அமைப்பு தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தகவல் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையிலே இந்த போர் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.