நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ள வெள்ளை
நிற நீர்த்தாரை வண்டி பொலிஸ் விசேட அதிரடிப்படையினால், ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் பணிகளுக்காக கொண்டுவரப்பட்டது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.இதேவேளை, இலங்கைக்கு, இந்தியா நீர்த்தாரை வண்டிகளை வழங்கியுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடன் எல்லைத்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு இந்தியா நீர்த்தாரை வண்டியினை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும், அதில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என்பதுடன், உணவு மற்றும் அத்தியாவசிய மருந்துகளின் கொள்வனவுக்காகவே ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்படவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.