ஹரின் பெர்ணான்டோவுக்கு எதிராக கட்சி தலைமையிடம் முறையிடப்படும். – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் மேதினக் கூட்டம் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதன்போது பொன்சேகாவுக்கும், ஹரினுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது.
இது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே பொன்சேகா இவ்வாறு குறிப்பிட்டார்.
மே தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் பொறுப்பு ஹரின் பெர்ணான்டோவிடம் ஒப்படைக்கப்பட்டது. எனினும், சில தவறுகள் இடம்பெற்றன. பேச்சாளர்களின் பட்டியலில் எனது பெயர் இருக்கவில்லை. ஒரு சிலர் திட்டமிட்ட அடிப்படையில் ஓரங்கட்டியுள்ளனர். இதனால் மேலும் சில எம்.பிக்கள் அதிருப்தியில் இருந்தனர். இது தொடர்பில் கட்சித் தலைவரிடம் முறையிடப்படும். தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” – என்றும் பொன்சேகா குறிப்பிட்டார்.