தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளைய தினம் பல கட்சிகளின் பேரணிகள் இடம்பெறவுள்ளதால் நாளை கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படவுள்ளது.
இதன்படி, நுகேகொடை மற்றும் கொழும்பு நகரில் முன்னெடுக்கப்படும் பேரணிகள், கூட்டங்கள் காரணமாக குறித்த பகுதியில் பொலிஸாரை சேவையில் ஈடுபடுத்த அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.