கொழும்பில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது நேற்று (09) நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்களை அடுத்து நாடளாவிய ரீதியில் அமைதியின்மை நிலையொன்று இலங்கையில் தோற்றம் பெற்றுள்ளது.
இநநிலையில், அரசியலமைப்பு முறைமையை நிலைநாட்டுவதற்கு இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என இந்திய பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் ஸ்வாமி தெரிவித்துள்ளார்.