(எம்.எப்.எம்.பஸீர்)
மே 9 வன்முறைகளின்போது, முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, துமிந்த திஸாநாயக்க, எஸ்.எம். சந்ரசேன, சன்ன ஜயசுமன ஆகியோரின் வீடுகளை தாக்கினா்கள் என்ற சந்தேகத்தில் எண்மர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் நாவலப்பிட்டி வீடு மற்றும் அவரது அலுவலகம் மீதான தாக்குதல் குறித்து நால்வரும் துமிந்த திஸாநாயக்க, எஸ்.எம். சந்ரசேன, சன்ன ஜயசுமன ஆகியோரின் வீடுகள் மீதான தாக்குதல் குறித்து நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.